முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத் தளமான புனித கஃபா ஆலயம் மற்றும் முஹம்மது நபியவர்களினால் கட்டப்பட்ட மதீனா பள்ளிவாயல் ஆகியவற்றை ஐங்கால தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கு தடை விதித்து மூடியுள்ளது சவுதி அரேபியா.
கஃபாவை சுற்றியோ, மக்கா பள்ளிவாயல் வளாகத்திலோ தொழுகைகளில் ஈடுபடுவதற்கு சவுதி அரசு தடை விதித்துள்ளது.
இன்று (20) ஜும்ஆ தொழுகையின்றி கஃபா ஆலயம் வெறிச்சோடிக் கிடக்கும் காட்சியை அல்-ஜஸீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
