சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 65 நாடுகளுக்கு தற்போது வரை பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 3043 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதுடன் 88,948 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை முற்பகல் 10 மணிக்குள் 24 மணி நேரத்தில்1804 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் கொரோனா சீனாவில் பரவிய வேகத்தை விட 09 மடங்கு வேகத்தில் சீனாவுக்கு வெளியில் உள்ள நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் 3736 பேரும், இத்தாலியில் 1128 பேரும், ஈரானில் 593 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
