இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பரித்து முஸ்லிம்களை நாடற்ற அகதிகலாக ஆக்கும் வகையில் இந்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பெரும் ஆர்பாட்டங்களையும் தர்ணாக்களையும் நடத்தி வருகின்றார்கள்.
இந்திய முஸ்லிம்களை குடியுரிமையற்றவர்களாக ஆக்கும் குறித்த மசோதாவுக்கு எதிராக இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதி மன்றத்தின் நண்பன் என்ற அமிகஸ் கியுரி சட்ட முறைப்படி தம்மையும் இணைக்கும் படி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிச்சல் பெச்சலட் ஜெரியா அவர்கள் தலையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதனை இந்திய மோடி அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.
