மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்திக் கொள்ள உணவு மற்றும் நிர்வாக அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்.
உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவுக்கான மருந்துகளை கண்டு பிடிப்பதில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.
