Our Feeds


Friday, March 6, 2020

www.shortnews.lk

அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய தடை விதிப்பு

 


கடந்த வருடம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை தொடர்ந்து அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதை இடை நிறுத்தியுள்ளதாக முஸ்லிம் கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை 65 கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

1981ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் இதுவரை 317 அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 41ம், புத்தளம் மாவட்டத்தில் 37ம் திருகோணமலை மாவட்டத்தில் 29ம் கண்டி மாவட்டத்தில் 28ம் கொழும்பு மாவட்டத்தில் 26ம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »