Our Feeds


Tuesday, March 10, 2020

www.shortnews.lk

கொரோனா அச்சம் - பெட்டிக்கலோ கெம்பஸ் அருகிலுள்ள பாடசாலைகளுக்க மாணவர்கள் சமூகமளிக்க வில்லை

 


மட்டக்களப்பில் அமைந்துள்ள பெட்டிக்கலொ கெம்பஸ் தனியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் அச்சத்தின் காரணமாக சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் மற்றும் புணானை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அச்சம் காரணமாக மாணவர்கள் வரவின்றி பாடசாலை வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத போதும் ஆசிரியர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »