Our Feeds


Sunday, September 6, 2020

www.shortnews.lk

முஸ்லிம் கலாசார தினைக்கள கட்டிடத்தில் பௌத்த சாசன அமைச்சு ? - 09 மாடிகளில் 06 மாடிகள் வெற்றிடம்

 


கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தில் பௌத்த சாசன மற்றும் கலாசார அமைச்சினை உள்வாங்குவதற்கு அரச உயர் மட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவம், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் அனைத்து மத விவகாரங்களுக்குமான அலுவலகங்களும் இக்கட்டிடத்தில் உள்வாங்கப்படும்.


கொழும்பு 10 ல் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடம் அமைக்கப்படுவதற்கு 2004ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2007ம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் 2010ல் கட்டிட நிர்மானப் பணிகள் தடைப்பட்டன.


மீண்டும் 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசின் போது அப்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் அவர்கள் கலந்துரையாடியதை அடுத்து 296 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 2017ல் கட்டிட வேலைகள் பூர்த்தி செய்ப்பட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு குறித்த கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.


இக்கட்டிடத்திற்கு சுமார் 600 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக முன்னால் அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். 


09 மாடிகளை கொண்ட இக்கட்டிடத்தில் முதல் 3 மாடிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களம் இயங்கி வரும் அதே வேலை மீதமுள்ள 6 மாடிகள் வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »