Our Feeds


Sunday, September 6, 2020

www.shortnews.lk

கடந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிப்புற்றது - அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார்

 


"கடந்த அரசாங்கத்தினால் நாட்டின் சகல துறைகளிலுமான பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிப்புற்றது. இளைஞர்களுக்கான பல தொழில்வாய்ப்பு வரப்பிரசாதங்கள் அரச அமைச்சர்களால் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அவை வெறும் வார்த்தைப் பிரயோகங்களாகவே முற்றுப்பெற்றன. அதனால், கடந்த பல வருடங்களாக நாடு பொருளாதாரப் பின்னடைவையே கொண்டிருந்தது"


எனினும், இந்நாட்களில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் நல்லெண்ணம் கொண்ட கண்ணோட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பட்டதாரிகள்/டிப்ளமோ உடையவர்களுக்குத் தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தினை மிகவும் உயர்வாக மதிப்பதுடன் எமது பிரதேசத்திற்கும்  அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இவ்வேலைத்திட்டத்தின் பெறுமதியை விளங்கி அதன் உச்ச பயனை அடைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பொறுப்பு இளைஞர்கள் வசமானது.


இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட 2020 பட்டதாரி/டிப்ளமோ பயிற்சி நிறைவின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பங்கு கொண்டு உரையாற்றிய அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் தெரிவித்தார்.

Media





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »