Our Feeds


Wednesday, December 23, 2020

www.shortnews.lk

சர்வதேசமே இலங்கையைப் பார்த்து நகைக்கிறது - -லக்க்ஷமன் கிரியெல்ல எம்.பி

 

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இரகசியமாக அரசாங்கம் மாலைதீவுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதனால் சர்வதேசமே இலங்கையைப் பார்த்து நகைக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையை அரசாங்கம் சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றுள்ளமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர் அரசாங்கமே முறையான தீர்மானத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இன்னும் உரிய தீர்மானம் வழங்கப்படவில்லை. ஆனால் இரகசியமான முறையில் இது குறித்து மாலைத்தீவுடன் பேசியிருக்கிறார்கள்.

அதனை அந்நாட்டு முக்கியஸ்தர்களே வெளிப்படுத்திவிட்டனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த பிரச்சினையை அரசாங்கம் சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றுள்ளமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசம் எம்மை பார்த்து நகைக்கிறது. எவ்வாறிருப்பினும் சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர் அரசாங்கமே முறையான தீர்மானமொன்றை வழங்க வேண்டும் என்றார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »