Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

O/L, A/L பரீட்சைகள் பிற்போடப்படும்? – உண்மை என்ன?

 



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான மாற்று திட்டங்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.


இணையத்தள வசதிகள் மற்றும் இணைய கல்விக்கான உபகரணங்கள் உரிய வகையில் மாணவர்களுக்கு கிடைக்காமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி பொதுதராதர சாதாரண தர உயர்தரம் மற்றும் சாதாரண தரத்திற்கான பரீட்சைகளை பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

2021ம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சைகளை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புலமை பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் 3ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகளை 2022ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »