Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

PHOTOS: கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரிக்கும் தமிழக முதல்வர் - ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரனம்.

 



தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியை பிடித்துள்ள திமுக வின் தலைவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் எடுத்து வரும் முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை கொரோனா தொற்றாமலிருக்க வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார துறை ஊழியர்கள் அணியும் PPE ஆடை அணிந்து சென்று நலம் விசாரித்தார்.


தமிழக முதல்வரின் இந்த செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.


கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்தமை தொடர்பில் தமிழக முதல்வர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்.


Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.


மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். 


தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!


#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும்  மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!


இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »