Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தல்

 



நாட்டில் தற்போது பிரயாண கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாண காவல்துறையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் முன்னெடுத்த தீடிர் சோதனை நடவடிக்கையின் போதே தொழுகையில் ஈடுபட்ட விடயம் கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து சிலர் பள்ளிவாசல்களிலும், ஏனையவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »