கண்டி தேசிய வைத்தியசாலைக்கு ஒரு தொகை (Corona Safety Kits) கொரோனா பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்கள்(Face Masks) என்பன அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மற்றும் Sofa City உரிமையாளர் மர்சூக் ஹாஜியார் ஆகியோரினால் நேற்று (03.06.2021) வழங்கிவைக்கப்பட்டன. வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ரிஸ்வி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பொருட்கள் கண்டி தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் திருமதி இரேஷா பெர்னாந்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள், பிரதி பணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் பொழுது, அக்குரணை மற்றும் கண்டியின் ஏனைய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் வசிப்பவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை பிரத்தியேகமான அமைப்பு ஒன்றின் மூலம் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரசவ அறைக்கான தளபாடங்கள் மற்றும் அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்கும், கண்டி மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்திய சாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் JakLeaf Lanka நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ரஸான் அவர்களும் கலந்து கொண்டார்.



