(இராஜதுரை ஹஷான்)
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. ஒரு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
