Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

கட்டுகஸ்தோட்டையில் 50 மாணவ, மாணவிகளுக்கு இரகசியமாக வகுப்பு: 9 பேர் கைது!

 



(செ. தேன்மொழி)


கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக இயங்கிய கல்வி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிலையத்தில் 50  மாணவ , மாணவிகளை தங்கவைத்து வகுப்புகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் வகுப்புகளை நடத்திய குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாக குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »