எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இலங்கையில் கொவிட் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 13 மில்லியன் சினோவெக்ஸ் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி தயாரிப்பு பணியானது, கொவிட் பரவலை பாரியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சினோவெக்ஸ் முதலாவது தடுப்பூசியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தயாரித்து நிறைவு செய்ய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை 400 முதல் 500 மில்லியன் டொலர் நிதியை ஆண்டொன்றுக்கு மருந்துகளுக்காக செலவிடுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், கடந்த 12 முதல் 18 மாத காலப் பகுதிக்குள் இலங்கையில் சுமார் 40 வகையான மருந்துகளை உற்பத்தி செய்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
