Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க விரும்பும் 21 இலங்கையர்கள்!

 



( எம்.எப்.எம்.பஸீர்)


ஆப்கானிஸ்தான், தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருக்க 21 இலங்கையர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 7 இலங்கையர்களை மாத்திரமே அங்கிருந்து வெளியேற்ற வேண்டியுள்ளதாக வௌவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 21 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சு, ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன். வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் அதற்கான அனுமதி பெற்ற அனைவரையும் அங்கிருந்து பாதுகாப்பாக திரும்ப ஆப்கானிஸ்தான் அனுமதிக்கும் என இலங்கை நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »