Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

ரிஷாதின் மனைவி உள்ளிட்ட 4 பேரின் பிணை மனு நிராகரிப்பு - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 



நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை மூன்றாவது முறையாகவும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் மற்றும் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »