Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

கொரோனா சடலங்களை சுற்றும் சிறிய பைகள் சீனாவிலிருந்து இறக்குமதிக்கு அனுமதி - புதிய டென்டரும் அறிவிப்பு

 



கொரோனா சடலங்களை சுற்றுவதற்காக பயன்படுத்தும் “சிறிய வகை” பைகளை கொள்வனவு செய்வற்காக கேள்வி மனு (டென்டர்) கோருவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


கடந்த காலங்களில் பயன்படுத்திய சிறிய வகையான பைகள் தரமற்றதாக காணப்பட்டதன் காரணமாக, இவ்வாறு புதிய டென்டருக்கு செல்வதற்கு தொழிநுட்ப குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சீனாவில் இருந்து 5000 பைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேலும் 10,000 பைகளை கொள்வனவு செய்ய டென்டர் கோருவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய பைகள் பயன்பாட்டுக்கு வரும் வரையில், தற்போதைய நிறுவனத்திடமே சிறிய பைகளை கொள்வனவு செய்து பயன்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »