Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: ஆப்கானிஸ்தானில் IS தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்.

 



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 175 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான குண்டுத் தாக்குதலை திட்டமிட்டவரை ட்ரோன் தாக்குதல் மூலம் தான் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


காபூலுக்கு அருகிலுள்ள நான்கார்ஹார் மாகாணத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பணியத்தைச் சேர்ந்த கெப்டன் பில் அர்பன் இன்று சனிக்கிழiமை தெரிவித்துள்ளார்.

இந்த ட்ரோன் தாக்குதலில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தின் வாயிலுக்கு அருகில் கடந்த வியாழ்க்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 175 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 150 பேர் காயமடைந்தனர்.

கோரோசன் மாகாண இஸ்லாமிய அரசு (ISIS-K) எனும் இயக்கம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கப் படையினர் 13 பேரும் அடங்கியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

அதேவேளை தமது போராளிகள் 28 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தலிபான் இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »