காதி நீதிமன்றத்தினால் முஸ்லிம் சமூகத்தினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது ஆகவே. காதி நீதிமன்றத்தை நீக்கும் பரிந்துரையை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றின் பதிவாளர் (ஓய்வு) மொஹமட் சுபைர் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியிடம் கோரிக்கை முன்வைத்தார்.
ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியினர் ஏற்பாடு செய்த மக்கள் கருத்துக் கோரல் சந்திப்பு நேற்று (26) கண்டி பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்றது.
தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் காதி நீதிமன்றத்தை நீக்கும் யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்ட மொஹமட் சுபைர் நீதிமன்ற சேவை கட்டமைப்பின் 40 வருட கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.