தென்மேற்கு ஹைட்டியில் 5.3 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லெஸ் கேய்ஸ் நகரில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து மேலும் 4.4 மற்றும் 5.1 ரிச்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.