Our Feeds


Thursday, February 10, 2022

ShortNews

கால்வாயில் புரண்ட பஸ் - 99 இல் தப்பிய பயணிகளும், நடத்துனரும், சாரதியும்



பொலன்னறுவை சிங்ஹபுர வீதியில் யானை வளைவு பிரதேசத்தில், பொலன்னறுவை வடக்கு கால்வாய்க்குள் தனியார் பஸ்ஸொன்று புரண்டு, போக்குக்குள் சிக்கிக்கொண்டமையால் அதில் பயணித்தவர்கள் 99 இல் தப்பியுள்ளனர்.


ஹிங்குரான்​கொட பன்சல்கொடெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் சேவையாற்றும் பெண்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸூக்குள் இறுகி காயமடைந்த பெண்கள் ஏழுபேர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது. அதில், 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »