கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
எனினும் தற்போது தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் ஐந்து நாட்களே கடுமையானதாக இருக்குமெனவும் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்றும் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.