Our Feeds


Friday, February 18, 2022

SHAHNI RAMEES

மீண்டும் அமைச்சுக்கு போக மாட்டேன் – நிமல் லன்சா விடாப்பிடி

 

தனது அமைச்சுக்கு மீண்டும் செல்வதற்கான எதிர்பார்ப்பு இல்லையென கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் தற்போதுள்ள நிலைமை தொடர்பில், உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

பல்வேறு காரணங்களினால் தான் கடும் விரக்தியில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு அமைச்சிலுள்ள தனது பொருட்களையும் அகற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

இராஜாங்க அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா கிராமிய வீதிகளின் நிர்மாணத்துக்காக விடுவிப்பதற்கு அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவினால் மறுப்பு தெரிவித்ததால் தான் விரக்தியடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளாா்.

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிப்பதில் இருந்து நிமல் லான்சாவை நீக்கியமை அவரது விரக்திக்கு மற்றுமொரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »