Our Feeds


Tuesday, February 8, 2022

ShortNews

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுக்குள் உள்வாங்கப்படவுள்ள மேலும் சில ஆசிரியர்கள் குழு - முழு விபரம் இணைப்பு



(எம்.மனோசித்ரா)


அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வில் பிரிவெனா ஆசிரியர்கள் , அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களையும் உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்துக்கமைய வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாக சுற்றறிக்கையில் ஏற்பாடுகளை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »