Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை துப்பாக்கிச் சூடு நடத்தி கடத்தல் – ஹொரணையில் அதிர்ச்சி சம்பவம்

 

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் ஹொரணை, கந்தன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தையான ஹெரண நீலக்க என்பவரினால் இந்த கடத்தல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சந்தேகநபர் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான ஹொரண நீலக்க என்பவர்,  சம்பந்தப்பட்ட வீட்டுக்கு முன்னால் வந்து டி – 56 துப்பாக்கியினால், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இவ்வாறு குழந்தையை கடத்திச் சென்றுள்ளாா்.

சந்தேகநபர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தனது மனைவியின் கை, காலைகள் கூரிய ஆயுதத்தால் துண்டு துண்டாக வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கியிருந்ததாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

அந்த சம்பவத்தின் பின்னர் அவரின் குழந்தை, சந்தேகபரின் மாமியாரின் பாதுகாப்பில் இருந்துள்ளதுடன், நாளைய தினம் குழந்தையை பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »