எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி வழங்காவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையைங்கள், புகையிரதங்கள், பயணிகள் பஸ், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும், தற்போது நாளாந்தம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்பு 365 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும், இல்லையெனில் இந்த மாதத்தில் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து, நிறுவனம் கடும் நிதிச் சரிவை சந்திக்க நேரிடும் என்றார்.