Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் - குறைந்தது 250 பேர் பலியென தகவல்!



ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »