Our Feeds


Sunday, June 12, 2022

SHAHNI RAMEES

இலங்கை சிறுவர்களுக்காக சர்வதேச சமூகத்திடம் உதவி கோரும் ஐ.நா

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள சிறுவர்களுக்காக சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கோரியுள்ளது.

எதிர்வரும் 7 மாதங்களுக்குள் இலங்கையிலுள்ள சிறார்களுக்கு அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக UNICEF என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரியுள்ளது.

இலங்கையில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய 1.7 மில்லியன் சிறார்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 04 மாதங்களுக்குள் பாரிய அனர்த்த நிலையை எதிர்நோக்கக்கூடிய இலங்கை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே வேண்டுகோளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »