Our Feeds


Sunday, June 12, 2022

SHAHNI RAMEES

BREAKING: இலங்கைக்கான பயணத்தடைகளை தளர்த்திய பிரித்தானியா!

 

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பயணிகளுக்கு

விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »