பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃபுளுவென்ஸா வைரஸ் பரவல்
அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃபுளுவென்ஸா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
காய்ச்சல், தலைவலி, சளி, மூக்கில் நீர்வடிதல், இருமல் மற்றும் பசியின்மை, சில சமயங்களில் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
