காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி குறிப்பிட்டுள்ளார்,
‘காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இரவில் மேற்கொள்ளப்பட் நடவடிக்கைள் குறித்து ஆழ்ந்த கவலைடைகிறேன். பொறுமையை கடைபிடிக்குமாறு அதிகாரிகளை நாம் வலியுறுத்துவதுடன், காயமடைந்தவர்களுக்கு மருது;துவ உதவிகள் கிடைக்கச் செய்யுமாறும் வலியுறுத்துகிறோம்’ என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அத்தியாவசியமானது. அதை கடுமையாக கட்டுப்படுத்துவது, இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார பிரச்சினைனகளுக்குத் தீர்வு காண்பதில் எவ்வாறு உதவும் என்பதைக் காண்பது கடினம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது. போராட்டம் நடத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
இதேவேளை, பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் இந்த வன்முறைச் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனசர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
