Our Feeds


Sunday, May 28, 2023

Anonymous

அலி சப்ரி ரஹீமின் MP பதவியை பறிக்க ஆதரவளிப்பேன் - அமைச்சர் அமரவீர

 



நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தின் பிரமுகர்களின் முனையங்கள் ஊடாக சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அலி சப்ரி ரஹீம் அவ்வாறு செயற்பட்டிருந்தமைக்காக  கண்டனம் தெரிவிப்பதாக கூறிய  அமைச்சர், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கும் யோசனையைக்  கொண்டுவந்தால் அதற்கு ஆதரவாக செயற்படுவேன் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சிறப்புரிமைகள் அகற்றப்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »