Our Feeds


Friday, June 30, 2023

ShortNews

PHOTOS: வெளிநாட்டு இராஜதந்திரிகள் நற்சான்றிதழ்கள் கையளிப்பு!



புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது.


புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:


1 . கலாநிதி . ரொஜர் கோபால் - Dr. Roger Gopaul 

   திரினிடாட் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகர் - (புது டில்லி)


2 . பேராசிரியர் (செல்வி) ஜாய்ஸ் கே. கிகாபண்டா - Prof. (Ms.) Joyce K. Kikafunda

    உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர் - (புது டில்லி)


3 . திருமதி லாலாட்டியானா அக்கோச் - Mrs. Lalatiana Accouche  

  சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் - (புது டில்லி)


4 . திரு. எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் - Mr. Eligio Alberto Salas De Leon

   பனாமா குடியரசின் தூதுவர் - (ஹா நோய் - Ha Noi)


5. திரு. டிடியர் வாண்டர்ஹாசெல்ட் - Mr. Didier Vanderhasselt

  பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர் (புது டில்லி)


6 . திரு. டிமிட்ரியோஸ் ஐயோனோவ் - Mr. Dimitrios Ioannou

  ஹெலனிக் குடியரசின் தூதுவர் – (புது டில்லி)


7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் - Dr. Bassam Al-Khatib

   சிரிய அரபுக் குடியரசு தூதுவர் - (புது டில்லி) 


8 . திரு. ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே - Mr. Javier Manuel Paulinich Velarde

  பெரு குடியரசு தூதுவர் - (புது டில்லி)


9 . திருமதி லீ மியோன் - Ms. Lee Miyon

  கொரியா குடியரசு தூதுவர் - கொழும்பு


10 . திரு. இஸ்டிவான் ஷப்போ - Mr. István Szabó

   ஹங்கேரி தூதுவர் - (புது டில்லி)


இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.


















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »