இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27,625 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் 5,550 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளும், பெண் துஸ்பிரயோக வழக்குகள் 4,312 ம் நிலுவையில் உள்ளன என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட புள்ளிவிபரத்தை வெளியிட்டார்.
