பங்களாதேஷில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை புறப்பட்டது. பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மெல்ல மாறிக்கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக மாற்று தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன் அதில் சரக்கு ரயில் வந்தது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
