இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேக நபராக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து முன்னிலைப்படுத்த, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.
விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதை தவிர்த்து இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில்கொண்டே கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
