எகிப்தில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இம்மாதம் 1ம் திகதி எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சீசீ யினால் திறந்து வைக்கப்பட்டது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள், மன்னர் டுட்டுன் காமூனின் கல்லறை, எகிப்திய பண்டைய கால சிலைகள், பிரமிட்டுகள் என ஆச்சரியமூட்டும் பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
