இந்த பஸ்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும், இவை ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட்’ நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட் (தனியார்) கம்பனிக்கு குறித்த 10 பஸ்களை ஒப்படைத்து, அவற்றின் நடவடிக்கைகளை இக்கம்பனியின் கீழ் மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த பஸ் சேவைகள் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இயலுமை இன்மை கண்டறியப்பட்டுள்ளதால், குறித்த நிறுவனம் மூலம் அதனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
