Our Feeds


Sunday, March 29, 2026

SHAHNI RAMEES

அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம்! - ஈரான் எச்சரிக்கை...

 

அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். 

ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. 

ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. 

அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத் தவறியதை நிலைநாட்ட முயல்கிறது என்றார். 

அமெரிக்க வீரர்கள் தரைவழியாக உள்ளே நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருப்பதாகவும், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம் என்றும் கலிபாப் எச்சரித்துள்ளார். 

ஈரான் சரணடைவது குறித்த கேள்விக்கு அரபு மொழியில் பதிலளித்துள்ள கலிபாப், ஈரானின் செய்தி தெளிவானது என்றும், தாங்கள் ஒருபோதும் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »