இது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கைக்கே உரியது எனத் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக புதுடில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச உடன்படிக்கை கடப்பாடுகளின் கீழ் 'IRIS Dena' என்ற ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளுக்கு இலங்கை தற்போது பராமரிப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த புதன்கிழமை இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர்களை மீட்டதுடன், 84 சடலங்களையும் மீட்டெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
