Our Feeds


Sunday, April 26, 2026

Zameera

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 11 பேர் காயம்


 தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26) காலை 9.20 மணியளவில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 11 பேரும் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, இவர்களுள் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தை நேரில் கண்ட சபாநாயகர், உடனடியாக செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »