மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப்
பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்குத் தாவியதுடன் அங்கிருந்த வீடொன்றின் மீது மோதி நின்றுள்ளது.இந்த விபத்தில் பேருந்திலிருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
