Our Feeds


Wednesday, May 20, 2026

Zameera

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது


 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடையோர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. 


பாராளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதில் பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அண்மைக்காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சகல தரப்பினருடனான சந்திப்பு ஒன்றுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில், இந்தக்கூட்டமானது நாளை நடைபெறவுள்ள நிலையில், தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »