Our Feeds


Wednesday, May 13, 2026

Zameera

அனுர பிரியதர்ஷன யாப்பா மீதான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு




(செ.சுபதர்ஷனி)

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2014 - 2015 காலப்பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி 6,146,110 ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »