Our Feeds


Friday, June 19, 2026

Zameera

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் ஒருவர் கைது


 ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சம் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த இவரிடம் நடத்திய சோதனையின் போது, அவரது பயணப் பையினுள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 07 கிலோ 500 கிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »