Our Feeds


Monday, June 1, 2026

Zameera

ரயில் தடம்புரண்டு : புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன

ரயில் தடம்புரண்டதன் காரணமாக, புத்தளம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 9.30 மணிக்கு சிலாபம் நோக்கி பயணித்த ரயில், நண்பகல் 12.30 மணியளவில் சிலாபம் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. 


இந்தச் சம்பவத்தின் காரணமாக, புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக மாதம்பே ரயில் நிலையம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »