Our Feeds


Tuesday, July 14, 2026

Admin

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சையிலிருந்த மேலும் இரு சிறைச்சாலை காவலர்கள் உயிரிழப்பு



நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிறைக்காவலர்கள் நேற்று (13) திங்கட்கிழமை மற்றும் இன்று (14) செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த சிறைக்காவலர்கள் 25 மற்றும் 39 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மற்றும் அதிகாரிகளுக்கிடையே பயங்கர மோதல்கள் வெடித்தன.


தற்போதைய மரணங்களுடன் சேர்த்து, உயிரிழந்த சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.


இந்த மோதல்களின் போது சிறைச்சாலைக்குள் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 21 ஆகும். அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட ஒட்டுமொத்தமாக 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


இக்கொடூர மோதலில் காயமடைந்த மேலும் பல கைதிகளும், சிறை அதிகாரிகளும் தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »