Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்


 எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 


இன்று (29) நடைபெற்ற ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சருக்கு அறிவித்ததன் பின்னர், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். 


அத்துடன், தற்போது பொலிஸ் சேவையில் 38,000 உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையுடனேயே சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். 


மேலும், ஓய்வு மற்றும் ஏனைய காரணங்களால் வருடமொன்றுக்கு சுமார் 2,000 பேர் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் இங்கு மேலும் தெரிவித்தார். 


எமக்குத் தேவையான மனித வளங்கள் போதியளவு இன்மை, உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் அறிவித்ததன் பின்னர் மனித வளத்தை அதிகரிக்க 10,000 பேரை இணைத்துக்கொள்ள எமக்கு அனுமதி கிடைத்தது. 


ஏனெனில், நாங்கள் ஆட்சேர்ப்பு செய்யாவிட்டால், வயது முதிர்வு மற்றும் ஏனைய காரணங்களால் சேவையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு இரண்டாயிரம் அளவில் இருக்கும். 


இதற்கமைய, இன்றைய நிலவரப்படி சுமார் 38,000 அத்தியாவசிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையுடனேயே இந்த சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »